மகளிர் டி20 கிரிக்கெட்; 4வது போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

முதல் 3 ஆட்டங்கள் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
image courtesy: @englandcricket
image courtesy: @englandcricket
Published on

மான்செஸ்டர்,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றூம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் முதல் 3 ஆட்டங்கள் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி இன்று நடக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் உள்ளூரில் தொடரை இழக்காமல் இருக்க இங்கிலாந்து அணி வரிந்து கட்டும். எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 11 மணிக்கு தொடங்குகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com