மகளிர் டி20 கிரிக்கெட்; வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டம்...அயர்லாந்து 134 ரன்கள் சேர்ப்பு

வங்காளதேசம் தரப்பில் நஹிதா அக்டர் 2 விக்கெட் வீழ்த்தினார்.
image courtesy; @IrishWomensCric
image courtesy; @IrishWomensCric
Published on

சில்ஹெட்,

அயர்லாந்து மகளிர் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வங்காளதேசம் வென்றது. தொடர்ந்து நடைபெற்று வரும் டி20 தொடரில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று 1-0 என வங்காளதேசம் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற அயர்லாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து அயர்லாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆமி ஹண்டர், கேபி லூயிஸ் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் கேபி லூயிஸ் 14 ரன், ஆமி ஹண்டர் 23 ரன் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து களம் இறங்கிய ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் 32 ரன்னிலும், லியா பால் 16 ரன்னிலும், லாரா டெலானி 35 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து சாரா போர்ப்ஸ் மற்றும் ரெபேக்கா ஸ்டோகெல் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் நஹிதா அக்டர் 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 135 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் ஆட உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com