மகளிர் டி20 உலகக் கோப்பை: "எந்த அணியையும் வீழ்த்துவோம்" - வங்காளதேச கேப்டன் நம்பிக்கை

இந்த உலகக் கோப்பை தொடரில் வங்காளதேசம் மிகவும் வலுவான அணிகள் இடம்பெற்றுள்ள பிரிவில் இடம்பிடித்துள்ளது.
மகளிர் டி20 உலகக் கோப்பை: "எந்த அணியையும் வீழ்த்துவோம்" - வங்காளதேச கேப்டன் நம்பிக்கை
Published on

சென்னை,

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அரையிறுதிக்குத் தகுதி பெறாத வங்காளதேச அணி, இந்த முறை அந்த சாதனையை நிகழ்த்தும் என்று அணியின் கேப்டன் நிகார் சுல்தானா ஜோதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடினமான பிரிவில் வங்காளதேசம்

இந்த உலகக் கோப்பை தொடரில் வங்காளதேசம் மிகவும் வலுவான அணிகள் இடம்பெற்றுள்ள பிரிவில் இடம்பிடித்துள்ளது. அந்த பிரிவில்,இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

நம்பிக்கையுடன் கேப்டன் ஜோதி

இது குறித்து பேசிய நிகர் சுல்தானா ஜோதி,

"எந்த அணிக்கு எதிராகவும் வெற்றி பெறும் திறன் எங்களிடம் உள்ளது. இந்த முறை எங்களின் சிறந்த உலகக் கோப்பை தொடராக இது அமையும் என்று நம்புகிறோம்"என்று தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்துடன் முதல் போட்டி

வங்காளதேச அணி தனது முதல் போட்டியில் நெதர்லாந்து அணியை ஜூன் 14-ம் தேதி எதிர்கொள்கிறது.

மகளிர் டி20 உலகக் கோப்பைக்கு முதல் முறையாக தகுதி பெற்றுள்ள நெதர்லாந்து அணிக்கு எதிரான இந்தப் போட்டி, வங்காளதேசத்தின் பயணத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஜோதியின் 6-வது உலகக் கோப்பை

நிகர் சுல்தானா ஜோதிக்கு இது 6-வது உலகக் கோப்பை தொடராகும். 2016-ஆம் ஆண்டு தனது 18-வது வயதில் உலகக் கோப்பையில் அறிமுகமான அவர், தற்போது மூன்றாவது முறையாக உலகக் கோப்பை தொடரில் வங்காளதேச அணியை கேப்டனாக வழிநடத்த உள்ளார். ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 12-ம் தேதி தொடங்குகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com