பெண்கள் டி20 உலகக்கோப்பை: அயர்லாந்து அணி அறிவிப்பு...!

பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது
Image Courtesy: ICC Twitter 
Image Courtesy: ICC Twitter 
Published on

டப்ளின்,

பெண்கள் டி20 உலகக்கோப்பை அடுத்த மாதம் 10-ம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கு ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இந்தப் 10 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு குரூப் சுற்றில் மோத உள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குருப்பிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இதில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம், நியூசிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா அணிகளும், குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த டி20 உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து அணி லாரா டெலானி தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பைக்கான அயர்லாந்து பெண்கள் அணி விவரம்:-

லாரா டெலானி (கேப்டன்), ஜார்ஜினா யெம்ப்சே, எமி ஹண்டர், ஷெளனா கவனாக், அர்லீன் கெல்லி, கேபி லீவிஸ், லூயிஸ் லிட்டில், ஷோபி மக்மஹோன், ஜேன் மாகுரே, காரா முர்ரே, லியா பால், ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட், எமியர் ரிச்சர்ட்சன், ரெபெக்கா ஸ்டோக்கெல், மேரி வால்ட்ரான்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com