மகளிர் டி20 உலகக் கோப்பை: பரிசுத்தொகை அறிவிப்பு

2024-ம் ஆண்டு உலகக் கோப்பையை விட 10 சதவீதம் அதிகமாகும்.
மகளிர் டி20 உலகக் கோப்பை:  பரிசுத்தொகை அறிவிப்பு
Published on

துபாய்,

இந்தியா, ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் நியூ சிலாந்து, பாகிஸ்தான் உள்பட 12 அணிகள் பங் கேற்கும் மகளிருக்கான 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 12-ந்தேதி முதல் ஜூலை 5-ந்தேதி வரை இங்கி லாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 7 இடங்களில் நடைபெறுகிறது. வருகிற ஜூன் 12-ந்தேதி பர் மிங்காமில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இங்கி லாந்து- இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான பரிசுத்தொகை விவரத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.82 கோடியாகும். இது 2024-ம் ஆண்டு உலகக் கோப்பையை விட 10 சதவீதம் அதிகமாகும். போட்டியில் மகுடம் சூடும் அணிக்கு ரூ.21% கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.11 கோடியும் பரிசுத்தொ கையாக வழங்கப்படும். அரைஇறுதியில் தோற்கும் அணிகள் தலா ரூ.6.30 கிடைக்கும். மேலும் போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் குறைந்தது போட்டி கட்டணமாக ரூ.2% கோடி வழங்கப்படும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com