மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: நடுவர் குழுவில் 4 இந்தியர்கள்

18 பேர் கொண்ட நடுவர் குழுவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று அறிவித்தது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: நடுவர் குழுவில் 4 இந்தியர்கள்
Published on

துபாய்,

10-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி முதல் ஜூலை 5-ந் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடக்கிறது. இந்த போட்டிக்கான 18 பேர் கொண்ட நடுவர் குழுவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று அறிவித்தது.

தொடர்ந்து 3-வது முறையாக பெண்கள் உலகக் கோப்பையில் அனைத்து நடுவர்களும் பெண்களே நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். நடுவர்கள் பட்டியலில் இந்தி யாவை சேர்ந்த ஜனனி, விரிந்தா ரதி, காயத்ரி ஆகியோரும், போட்டி நடு வர் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த லட்சுமியும் இடம் பிடித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com