பெண்கள் உலகக் கோப்பை: வங்காளதேச அணிக்கு 230 ரன்கள் இலக்கு நிர்ணையித்தது இந்திய அணி

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு ரன்கள் 229 ரன்கள் குவித்துள்ளது.
Image Courtesy : @ICC
Image Courtesy : @ICC
Published on

ஹாமில்டன்,

பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் 22 ஆவது லீக் ஆட்டத்தில் இந்திய அணியும் வங்காளதேச அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய மந்தனா - ஷபாலி வர்மா ஜோடி சிறப்பாக விளையாடினர். ஷபாலி வர்மா 42 ரன்கள் எடுத்த நிலையிலும் ஸ்ம்ரிதி மந்தனா 30 ரன்களிலும் வெளியேறினர். ஒரு முனையில் விக்கெட்கள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய யாஷிகா பாட்டியா அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.

பின்வரிசையில் ரிச்சா கோஷ் 26 ரன்கள் எடுத்து சற்று ஆறுதல் அளித்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 230 ரன்கள் இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கவுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com