மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

 கவுகாத்தி,

13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் 11வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து , வங்காளதேசம் மோத உள்ளன. அசாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற உள்ளது.

மகளிர் உலகக்கோப்பை புள்ளிப்பட்டியலில் வங்காளதேசம் 5வது இடத்திலும், நியூசிலாந்து 7வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com