மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை எளிதில் வீழ்த்திய இங்கிலாந்து

தென்னாப்பிரிக்காவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது.
கவுகாத்தி,
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 4வது லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா, இலங்கை மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா வீராங்கனைகள் இங்கிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர். தென்னாப்பிரிக்க அணி 20.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 69 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் சினலோ அதிகபட்சமாக 22 ரன்கள் சேர்த்தார்.
சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து வீராங்கனை லின்சி 4 ஓவரில் 7 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 70 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து தொடக்க வீராங்கனைகளாக பியூமவுண்ட், ஏமி களமிங்கினர். இருவரும் தென்னாப்பிரிக்க பந்து வீச்சை பவுண்டரிகளாக சிதறடித்தனர். இறுதியில் இங்கிலாந்து 14.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 70 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் தென்னாப்பிரிக்காவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. பியூமவுண்ட் 18 ரன்களும், ஏமி 40 ரன்களும் விளாசி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர்.






