பெண்கள் உலகக்கோப்பை: மந்தனா, மிதாலி ராஜ் அதிரடி ஆட்டம்- தென் ஆப்பிரிக்கா அணிக்கு 275 ரன்கள் இலக்கு

அரையிறுதிக்கு தகுதி பெற இந்திய அணி இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
Image Courtesy : @BCCIWomen
Image Courtesy : @BCCIWomen
Published on

கிரிஸ்ட்சர்ச்,

பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது பரபரப்பரான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 28-வது போட்டியில் இந்திய பெண்கள் அணி தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அரை இறுதி போட்டிக்குள் நுழைய வேண்டும் எனில் இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி பெறுவது அவசியம் என்ற கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது.

தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஷபாலி வர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். சிறப்பாக விளையாடிய அவர் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவால் அளித்தார். அவர் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தனது பங்கிற்கு 68 ரன்கள் குவித்தார்.

இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்தது. 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.

தென் ஆப்பிரிக்கா அணி ஏற்கனவே அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com