மகளிர் உலகக் கோப்பை: டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு

கோப்புப்படம்
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.
கொழும்பு ,
13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்த நிலையில் , கொழும்பில் இன்று நடக்கும் 9-வது லீக்கில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானை சந்திக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை மோதியுள்ள 16 ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியாவே வெற்றி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.
Related Tags :
Next Story






