மகளிர் உலகக்கோப்பை: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை,
மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய பெண்கள் அணி, சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இந்தியாவிற்கு என்ன ஒரு மகிமையான தருணம்! எங்கள் நீல நிற பெண்கள் தைரியம், கருணை மற்றும் சக்தியை மறுவரையறை செய்து, வருங்கால தலைமுறையினரை ஊக்குவிக்கின்றனர். நீங்கள் அச்சமற்ற, உடைக்க முடியாத மனப்பான்மையுடன் உலகம் முழுவதும் மூவர்ணக் கொடியை ஏந்திச் சென்றிருக்கிறீர்கள். வாழ்த்துகள்! வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ஜெய் ஹிந்த்!" என்று பதிவிட்டுள்ளார்.






