சூர்யவன்ஷி விளையாடியதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது - ரியான் பராக்


சூர்யவன்ஷி விளையாடியதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது - ரியான் பராக்
x

Image Courtesy: @IPL 

குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சூர்யவன்ஷி சதம் அடித்து அசத்தினார்.

ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 47-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 209 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்கள் அடித்தார்.

பின்னர் 210 ரன் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சூர்யவன்ஷி சதம் விளாசினார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் அளித்த பேட்டியில் கூறியதாவது, இது அற்புதமானது. அவருடன் நாங்கள் 2 மாதங்கள் நேரத்தை செலவிட்டு எங்களால் அவரை எப்படி முன்னேற்ற முடியும் என்பதைப் பார்த்தோம். இன்று உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் நிறைந்த குஜராத்துக்கு எதிராக அவர் விளையாடியதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

நாங்கள் எங்களுடைய ஆட்டத்தை கடந்த போட்டியில் இருந்து மாற்றியுள்ளோம். பேட்டிங்கில் எப்படி ஆட்டத்தை முன்னதாகவே முடிக்கலாம் என்று சிந்தனை செய்தோம். பேட்டிங்கில் அதிரடியாக விளையாடினோம். நிறைய பயிற்சிகளை செய்த நாங்கள் இன்று அதை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளோம். அது எங்களுக்கு நன்றாக வேலை செய்தது.

ஐ.பி.எல் தொடரைப் பார்த்து நீங்கள் ஒவ்வொரு நாளும் கற்றுக்கொள்ளலாம். ஆர்.சி.பி எப்படி தொடர்ச்சியாக அசத்துகிறது, சூரியகுமார் பாய் எப்படி விஷயங்களை செய்கிறார் என்பனவற்றை கற்றுக் கொள்ளலாம். இது போன்ற பெரிய வெற்றியைத் தான் நாங்கள் தேடிக் கொண்டிருந்தோம். அது ஒருதலைபட்சமாக வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. பிட்ச்சை பார்த்து அடுத்தப் போட்டியில் நாங்கள் முடிவுகளை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story