

பிரிஸ்டல்,
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4வது ஆட்டத்தில் ஆரன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா மற்றும் குல்பதின் நாயப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று விளையாடுகின்றன.
ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ள டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் சுமித் ஆகிய இருவரும் பந்து சேதப்படுத்தியதற்காக தடை விதிக்கப்பட்டு பின் மீண்டும் விளையாட உள்ள முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.
இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணி பந்து வீசுகிறது.