உலகக்கோப்பை கிரிக்கெட்: டேவிட் மலான் அதிரடி சதம்..! இங்கிலாந்து அணி 364 ரன்கள் குவிப்பு

வங்காளதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 364 ரன்கள் குவித்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட்: டேவிட் மலான் அதிரடி சதம்..! இங்கிலாந்து அணி 364 ரன்கள் குவிப்பு
Published on

தர்மசாலா,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.இந்த தொடரில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. தர்மசாலாவில் காலை 10.30 மணிக்கு தொடங்கிய 7-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸில் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக பேர்ஸ்டோ , டேவிட் மலான் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தனர். இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தனர் .தொடர்ந்து பேர்ஸ்டோ அரைசதம் அடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் நிலைத்து ஆடினார்.

மலான் ,ரூட் , இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். சிறப்பாக விளையாடிய டேவிட் மலான் சதம் அடித்து அசத்தினார்.தொடர்ந்து அவர் 140 ரன்களில் வெளியேறினார், மறுபுறம் அரைசதம் அடித்த ஜோ ரூட் 82 ரன்களில் வெளியேறினார்.

இறுதியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்தது.வங்காளதேச அணியில் மெஹ்தி ஹாசன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com