உலகக்கோப்பை கிரிக்கெட்; வங்காளதேசத்துக்கு எதிராக டாஸ் வென்ற நெதர்லாந்து பேட்டிங் தேர்வு..!

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
உலகக்கோப்பை கிரிக்கெட்; வங்காளதேசத்துக்கு எதிராக டாஸ் வென்ற நெதர்லாந்து பேட்டிங் தேர்வு..!
Published on

கொல்கத்தா,

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து - வங்காளதேசம் அணிகள் மோத உள்ளன.

இரு அணிகளும் 5 ஆட்டங்களில் ஆடி தலா 1 வெற்றி, 4 தோல்வி கண்டுள்ளன. இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிடும். இதனால் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இதையடுத்து இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com