உலகக்கோப்பை தகுதிச்சுற்று; அமெரிக்கா அணியை வீழ்த்தி நேபால் அபார வெற்றி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன
உலகக்கோப்பை தகுதிச்சுற்று; அமெரிக்கா அணியை வீழ்த்தி நேபால் அபார வெற்றி
Published on

ஹராரே,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்கா , நேபால் அணிகள் மோதின.டாஸ் வென்ற நேபால் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணி 49 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஷயான் ஜஹாங்கீர் அபாரமாக ஆடி சதம் அடித்தார். நேபால் அணி சார்பில் கரண் கே.சி 4 விக்கெட் , குல்சன் ஜா 3 விக்கெட் வீழ்த்தினர்,

இதனை தொடர்ந்து 208  ரன்கள் இலக்குடன் விளையாடிய நேபால் அணி 43 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது.அந்த அணியில் அதிகபட்சமாக பிம் ஷார்க்கி 77 ரன்கள் எடுத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com