உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி; ஆஸ்திரேலிய அணி தடுமாற்றம்

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
லார்ட்ஸ்,
டெஸ்ட் கிரிக்கெட்டை வளர்க்கும் நோக்கில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற ஐ.சி.சி. தொடரை உருவாக்கியது. இதன் முதலாவது சீசனில் நியூசிலாந்து அணியும், 2-வது சீசனில் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையை கைப்பற்றின. இந்த 2 சீசன்களிலும் இந்திய அணி 2-வது இடம் பெற்றது.இதனையடுத்து தற்போது நடைபெற உள்ள 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி லண்டன் லார்ட்சில் இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி கடந்த ஒரு வாரமாக இரு அணி வீரர்களும் கடும் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.கோப்பையை தக்கவைக்க ஆஸ்திரேலிய அணியும், நீண்ட காலமாக ஐ.சி.சி. கோப்பையை வெல்ல போராடி வரும் தென் ஆப்பிரிக்க அணியும் மோத உள்ளதால் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கவாஜா , லபுசேன் களமிறங்கினர் . தொடக்கத்தில் கவாஜா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து கேமரூன் கிரீன் 4 ரன்களிலும், லபுசேன் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து வந்த ஹெட் 11 ரன்களில் வெளியேறினார் இதனால் ஆஸ்திரேலிய அணி முக்கிய 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது .ஆஸ்திரேலிய அணி உணவு இடைவேளை வரை 4 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்களை எடுத்துள்ளது






