ரெய்னாவிடம் சென்னை அணி குறித்து கிண்டலாக பேசிய யுவராஜ்- அதிரடி பதிலளித்த ரெய்னா ..!!

சென்னை அணி குறித்து ரெய்னாவிடம் யுவராஜ் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Image Courtesy : Screengrab from Twitter
Image Courtesy : Screengrab from Twitter
Published on

மும்பை,

ஐபிஎல் 15வது சீசன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

நேற்றைய தோல்வி மூலம் நடப்பு சீசனில் ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணியுடன் சென்னை அணியும் தற்போது இணைந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 16 ஓவரில் 97 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 

இந்த நிலையில் சென்னை - மும்பை போட்டியின் போது உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்றை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் யுவராஜ் மற்றும் ரெய்னா ஆகியோர் பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது யுவராஜ் சென்னை அணி குறித்து ரெய்னா-விடம் கிண்டல் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் அருகில் இருக்கும் ரெய்னாவிடம் பேசும் யுவராஜ், "இன்றிரவு உங்கள் அணி 97 ரன்களுக்கு  ஆட்டமிழந்துள்ளது. இது குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேட்டார்.

அதற்கு பதில் அளித்த ரெய்னா, "நான் தான் போட்டியிலே இல்லையே" என அதிரடியாக பதில் அளித்தார். இவர்களின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com