ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் துணை கேப்டன் நியமனம்

ஜிம்பாப்வே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹராரே,
ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு கூட்டம் ஹராரேவில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து பல முடிவுகள் எடுக்கப்பட்டன.
அந்த கூட்டத்தின் முடிவில் ஜிம்பாப்வே கிரிகெட்டின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணிக்கு புதிய கேப்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிரெய்க் எர்வின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதன்படி ஜிம்பாப்பே கிரிக்கெட்டின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் ங்காரவா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் ஆல் பார்மட் துணை கேப்டனாக பிரையன் பென்னட் நியமிக்கப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story






