டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற ஜிம்பாப்வே, நமீபியா அணிகள்


டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற ஜிம்பாப்வே, நமீபியா அணிகள்
x

Image Courtesy: @ICC

தினத்தந்தி 3 Oct 2025 6:00 PM IST (Updated: 3 Oct 2025 6:00 PM IST)
t-max-icont-min-icon

ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய அணிகள் அடுத்தாண்டு நடைபெறும் டி20 உலக்கோப்பைக்குத் தகுதிபெற்றுள்ளன.

துபாய்,

2026 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் நடைபெறுகிறது. 2024-ம் ஆண்டு அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற தொடர் போலவே இந்தத் தொடருக்கும் மொத்தமாக 20 அணிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்படவுள்ளன.

இந்தத் தொடருக்கு டி20 தரவரிசைப் பட்டியலில் உள்ள முதல் 8 அணிகள் நேரடியாகத் தகுதிபெறும். மற்ற அணிகள் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றதன் அடிப்படையில் தகுதி பெறும்.

அந்த வகையில், ஜிம்பாப்வே தனது கடைசி நான்கு போட்டிகளில் கென்யா மற்றும் தான்சானியா அணிகளை வீழ்த்தி டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது. அதேபோல, நமீபியா அணியும் தகுதிபெற்றுள்ளது.

அமெரிக்க பகுதியில் இருந்து கனடாவும், ஐரோப்பிய பகுதிகளில் இருந்து நெதர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய அணிகளும் தகுதிபெற்றுள்ளன.

டி20 உலகக்கோப்பை தொடருக்கு இதுவரை தகுதி பெற்றுள்ள அணிகள் விவரம்: ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்காளதேசம், கனடா, இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, இத்தாலி, நமீபியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே.

1 More update

Next Story