

கொல்கத்தா,
2026 டி20 உலகக் கோப்பை தொடர் ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 8 போட்டி முடிவடைந்த நிலையில், அரையிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. உலகக் கோப்பையில் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் 8 சுற்றில் தோற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்தன.
மத்திய கிழக்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் பதட்ட சூழ்நிலையால் இந்த இரு நாட்டு அணி வீரர்களும் நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். விமான சேவை ரத்தானதால் வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே வீரர்கள் இந்தியாவிலேயே தங்கி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்தியாவில் பிரபலமான ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. ஹோலி பண்டிகையை ஜிம்பாப்வே வீரர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.