இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு.. 4 வருடங்கள் கழித்து முன்னணி வீரருக்கு இடம்

இலங்கை - ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி 29-ம் தேதி நடைபெற உள்ளது.
image courtesy:ICC
image courtesy:ICC
Published on

ஹராரே,

இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வரும் 29-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கிரெய்க் எர்வின் தலைமையிலான அந்த அணியில் 4 வருடங்கள் கழித்து முன்னணி வீரரான பிரண்டன் டெய்லர் ஒருநாள் போட்டிகளுக்கான ஜிம்பாப்வே அணியில் இடம்பிடித்துள்ளார்.

ஜிம்பாப்வே அணி விவரம் பின்வருமாறு:

கிரேக் எர்வின் (கேப்டன்), பிரையன் பென்னட், ஜொனாதன் காம்ப்பெல், பென் குர்ரன், பிராட் எவன்ஸ், ட்ரெவர் குவாண்டு, வெஸ்லி மாதேவெரே,கிளைவ் மடாண்டே, எர்னஸ்ட் மசுகு, டோனி முனியோங்கா, பிளெஸ்சிங் முசரபானி, ரிச்சர்ட் ங்கராவா, நியூமன் நியாம்ஹூரி, சிக்கந்தர் ராசா, பிரண்டன் டெய்லர், சீன் வில்லியம்ஸ்.

X

Daily Thanthi
www.dailythanthi.com