ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்


ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விலகல்
x

image courtesy:ICC

தினத்தந்தி 6 Aug 2025 9:30 AM IST (Updated: 6 Aug 2025 9:30 AM IST)
t-max-icont-min-icon

ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

வெல்லிங்டன்,

ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

இந்நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் வில்லியம் ஓ ரூர்க் விலகி உள்ளார். முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் பென் லிஸ்டர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story