இந்தியா - இங்கிலாந்து போட்டியை நேரில் கண்டு ரசிக்கும் தோனி, ரிஷப் பண்ட்

தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
இந்தியா - இங்கிலாந்து போட்டியை நேரில் கண்டு ரசிக்கும் தோனி, ரிஷப் பண்ட்
Published on

லண்டன்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. தொடர் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 387 ரன்கள் குவித்தது.தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்த நிலையில், இந்த போட்டியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய வீரர் ரிஷப் பண்ட் ஆகியோர் நேரில் கண்டு ரசித்து வருகின்றனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com