பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
Published on

மும்பை,

10 அணிகள் இடையிலான 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு ரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கி ழமை) நடைபெற்ற 24-வது லீக் ஆட்டத்தில் முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை சந்தித்தது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் ரிக்கல்டன் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். தொடர்ந்து டி காக் , நமன் திர் இருவரும் சிறப்பாக விளையாடினர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர். நமன் திர் 50 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் பஞ்சாப் அணியின் பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட டி காக் சதமடித்து அசத்தினார்.

இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியில் அர்ஸ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

196 ரன்களை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடக்க வீரரான ப்ரியான்ஷ் ஆர்யா 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீரரான பிரப்சிம்ரன் சிங் சிறப்பாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டார்.

இவருடன் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக ஆடினார். போட்டி முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்களை குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பஞ்சாப் சார்பில் பிரப்சிம்ரன் சிங் அதிகபட்சமாக 80 ரன்களை குவித்தார். மும்பை தரப்பில் கசான்ஃபர் 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் 1 விக்கெட் கைப்பற்றினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com