முன்கூட்டியே தொடங்கும் 2027 ஐபிஎல் தொடர் ?

ஐ.பி.எல். போட்டியை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
முன்கூட்டியே தொடங்கும் 2027 ஐபிஎல் தொடர் ?
Published on

புதுடெல்லி,

சமீபத்தில் நிறைவடைந்த 19-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது.

இந்தியாவில் கோடை வெயில் சுட்டெரிக்கும் ஏப்ரல், மே மாதங்களில் ஐ.பி.எல். போட்டி நடப்பதால் வீரர்கள், ரசிகர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். இதனால் ஐ.பி.எல். போட்டியை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதை இப்போது இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசீலிக்க தொடங்கி இருக்கிறது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் தேவஜித் சைக்யா நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது,

இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி மார்ச் 28-ந்தேதி தொடங்கி மே 31-ந்தேதி வரை நடைபெற்றது. நாங்கள் விவாதித்து வரும் ஒரே விஷயம் என்னவென்றால், மே 15-ந்தேதிக்கு பிந்தைய தொடரின் இறுதி கட்டத்தில் மழை பெய்வதற்கோ அல்லது பருவமழைக்கு முந்தைய சீசன் தொடங்குவதற்கோ வாய்ப்புள்ளது. மறுபக்கம் கடும் வெப்பம் வாட்டி வதைக்கிறது. இது வீரர்களுக்கோ அல்லது ரசிகர்களுக்கோ உகந்தது அல்ல. எனவே மார்ச் மாதத்தின் இறுதிபகுதியை விட சற்று முன்னதாக போட்டியை தொடங்கலாமா? என்பது குறித்து கிரிக்கெட் வாரியமும், ஐ.பி.எல். நிர் வாக கவுன்சிலும் விவாதித்து வருகிறது. அடுத்த ஆண்டு முதல் இதற்கான முயற்சியை மேற்கொள்வோம். மார்ச் 10-ந்தேதி தொடங்கி மே 15-ந்தேதிக்குள் போட்டியை முடிக்கும் வகையில் காலஅவகாசத்தை பார்க்கும்படி எங்களது விளையாட்டு மேம்பாட்டு பொது மேலாளரை ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com