

ஹூப்ளி,
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் கர்நாடகா-ஜம்மு காஷ்மீர் அணிகள் இடையி லான இறுதி ஆட்டம் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த ஜம்மு-காஷ்மீர் அணி 584 ரன் கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய கர்நாடக அணி லோகேஷ் ராகுல் (13 ரன்) கேப்டன் தேவ்தத் படிக்கல் (11 ரன்), கருண் நாயர் (0), ரவிச்சந்திரன் சமரன் (0) ஆகியோ ரின் விக்கெட்டுகளை வரிசையாக இழந்து திணறினாலும், இன்னொரு பக் கம் நிலைத்து நின்று ஆடிய மயங்க் அகர்வால் சதம் அடித்து போராடுகிறார்.
ஆட்ட நேரம் முடிவில் கர்நாடகா 5 விக்கெட்டுக்கு 220 ரன்கள் எடுத் துள்ளது. மயங்க் அகர்வால் 130 ரன்களுடனும் (207 பந்து, 17 பவுண்டரி), கிருத்திக் கிருஷ்ணா 27 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். வேகப்பந்து வீச் சாளர் அகிப் நபி 3 விக்கெட் வீழ்த்தினார். இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.