‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக்: செயின்ட் ஜோசப்ஸ் அணியிடம் எஸ்.ஆர்.எம். தோல்வி

‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் போட்டியில், செயின்ட் ஜோசப்ஸ் அணியிடம் எஸ்.ஆர்.எம். அணி தோல்வியடைந்தது.
Published on

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், டாக்டர் ரெலா இன்ஸ்டிடியூட் மற்றும் மருத்துவ மையம், ஆச்சி மசாலா நிறுவனம் ஆகியவை ஆதரவுடன் ஏ டிவிசன் கைப்பந்து லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் சுங்க இலாகா அணி 25-20, 25-22, 26-24 என்ற நேர்செட்டில் பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரி அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. மற்றொரு ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி 19-25, 21-25, 23-25 என்ற நேர்செட்டில் செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி அணியிடம் தோல்வி கண்டது. இந்த போட்டி இன்று முதல் 3 நாட்கள் அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி மைதானத்தில் நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com