* இங்கிலாந்து கிரிக்கெட்டின் இயக்குனராக 3 ஆண்டுகள் பணியாற்றிய முன்னாள் கேப்டன் ஆன்ட்ரூ ஸ்டிராஸ் அந்த பொறுப்பில் இருந்து நேற்று விலகினார். அவரது மனைவி ரூத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அருகில் இருந்து கவனித்துக் கொள்வதற்காக ஸ்டிராஸ் இந்த முடிவை எடுத்துள்ளார்.