மின்வாரிய கூடைப்பந்து: தமிழக அணிக்கு 2-வது வெற்றி

மின்வாரிய கூடைப்பந்து போட்டியில், தமிழக அணிக்கு 2-வது வெற்றி கிடைத்தது.
மின்வாரிய கூடைப்பந்து: தமிழக அணிக்கு 2-வது வெற்றி
Published on

சென்னை,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் 44-வது அகில இந்திய மின்வாரிய அணிகள் இடையிலான கூடைப்பந்து மற்றும் பிரிட்ஜ் (சீட்டாட்டம்) போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதன் கூடைப்பந்து போட்டி தொடக்க விழாவில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக சேர்மன் விக்ரம் கபூர் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். கூடைப்பந்து போட்டியில் காலையில் நடந்த ஆட்டத்தில் தமிழக அணி 70-48 என்ற புள்ளி கணக்கில் ஆந்திராவை தோற்கடித்தது. மாலையில் நடந்த ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 52-40 என்ற புள்ளி கணக்கில் மராட்டிய அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது. மற்ற ஆட்டங்களில் அரியானா, பஞ்சாப் அணிகள் வெற்றி பெற்றன. இந்த போட்டி நாளை வரை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com