இங்கிலாந்து,
இங்கிலாந்து-தென்னாப்ரிக்கவுக்கு இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. முதல் போட்டி வருகிற 6ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெரும். இப்போட்டியில் விளையாடும் 12 பேர் கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜோ ரூட் தலைமையிலான அணியில் முன்னாள் கேப்டன் குக், கீடன் ஜேன்னிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்க உள்ளனர். வேகபந்து வீச்சாளர்களான கிரிஸ் வோக்ஸ் மட்டும் ஜேக் பால் காயம் காரணமாக அணியில் சேர்க்கப்படவில்லை.
இந்தியாவிற்கு எதிராக சிறப்பான அறிமுக ஆட்டங்களில் விளையாடிய 20 வயதான ஹசிப் ஹமீத்தும் காயம் காரணமாக இடம் பெறவில்லை.
அணியின் முழு விவரம்:
அலெஸ்டர் குக்,கீடோன் ஜென்னிங்ஸ், கேரி பேலன்ஸ், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், மோயின் அலி, லியம் டாவ்ஷன், ஸ்டுவர்ட் பிராட், மார்க் வுட், ஜிம்மி ஆண்டர்சன் மற்றும் தோபி ரோலண்ட்-ஜோன்ஸ்.