

சுசோ,
ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டோர்) மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து போட்டி சீனாவின் சுசோ நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதுகின்றன.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்ற லெபனான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் பிரீத்திகா 2 கோல்களும் ஜோயா ஜோயா மற்றும் ஆல்வா சென்ஜாம் தலா 1 கோலும் அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
2004-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை கால்பந்து யு19 மகளிர் சாம்பியன்ஷிப் தொடருக்குப் பிறகு, ஆசியக் கோப்பையின் நாக்-அவுட் சுற்றுக்கு இந்திய மகளிர் அணி முன்னேறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.