இத்தாலி சென்றுள்ள இந்திய கால்பந்து வீராங்கனைகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஊழியர் சஸ்பெண்ட்; கால்பந்து சம்மேளனம் அதிரடி நடவடிக்கை

17 வயதுக்குட்பட்ட பெண்கள் கால்பந்து அணியிடம், குழு ஊழியர் ஒருவர் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.
இத்தாலி சென்றுள்ள இந்திய கால்பந்து வீராங்கனைகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஊழியர் சஸ்பெண்ட்; கால்பந்து சம்மேளனம் அதிரடி நடவடிக்கை
Published on

புதுடெல்லி,

17 வயதுக்குட்பட்ட பெண்கள் கால்பந்து அணியிடம், குழு ஊழியர் ஒருவர் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து அந்த ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (ஏஐஎப்எப்) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

17 வயதுக்குட்பட்ட பெண்கள் கால்பந்து அணி தற்போது ஐரோப்பாவிற்கு ஒரு வெளிப்பாடு சுற்றுப்பயணத்தில் உள்ளது. கால்பந்து அணியினர் ஜூலை 1 முதல் ஜூலை 7 வரை நார்வேயில் நடைபெறும் 'ஓபன் நோர்டிக்' போட்டிக்கு தயாராகி வருகின்றனர். இந்திய அணி நோர்டிக் போட்டியில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக, ஜூன் 22 முதல் 26 வரை இத்தாலியில் நடைபெற்ற 6வது டோர்னியோ பெண்களுக்கான கால்பந்து போட்டியில் இளம் இந்திய அணி பங்கேற்றது.

இந்திய அணியின் இத்தாலி சுற்றுப்பயணத்தில் குழுவுடன் அந்த ஊழியர் இருந்தார். ஆனால் அணியினருடன் அவர் எந்த புகைப்படங்களிலும் காணப்படவில்லை. இந்த நிலையில், அவர் சில வீராங்கனைகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகர் எழுந்தது.

அந்த ஊழியரின் பெயரை கால்பந்து சம்மேளனம் வெளியிடவில்லை. ஆனால் தற்காலிகமாக அந்த நபரை இடைநீக்கம் செய்து மேலும் விசாரணையைத் தொடங்கியது. ஒழுக்கமின்மை விவகாரத்தில் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை கால்பந்து சம்மேளனம் பின்பற்றுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சம்பந்தப்பட்ட நபரை அணியுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்தி, உடனடியாக இந்தியாவுக்குத் திரும்பவும், அவர் வந்தவுடன் மேலதிக விசாரணைக்கு நேரடியாக ஆஜராகவும் கால்பந்து சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com