உலகக் கோப்பை கால்பந்து : உலக சாதனை படைத்தார் மெஸ்ஸி

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை லியோனல் மெஸ்ஸி படைத்துள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்து : உலக சாதனை படைத்தார் மெஸ்ஸி
Published on

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் ஆஸ்திரியா அணிகள் மோதின.

இந்தப் போட்டியின் முதல் பாதியில் அர்ஜென்டினா அணிக்காக விளையாடும் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி ஆட்டத்தின் 38-ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.

அர்ஜென்டினா அணியின் ஃபகுன்டோ மெதினா வழங்கிய அசிஸ்ட்-ஐ சரியாக பயன்படுத்திய லியோனல் மெஸ்ஸி தனது அணிக்கு முதல் கோல் அடித்தார்.

இதன் காரணமாக அர்ஜென்டினா அணி ஆட்டத்தின் முதல் பாதி வரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த கோல் மூலம் லியோனல் மெஸ்ஸி உலக சாதனை படைத்துள்ளார்.

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற சாதனையை லியோனல் மெஸ்ஸி படைத்துள்ளார்.

உலகக் கோப்பை தொடர்களில் தொடர்ச்சியாக ஆறாவது போட்டியில் மெஸ்ஸி கோல் அடித்துள்ளார். இன்றைய போட்டியில் கோல் அடித்ததன் மூலம் அர்ஜென்டினா அணிக்காக லியோனல் மெஸ்ஸி அடித்த 17-ஆவது கோல் ஆகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com