ஆசிய கோப்பை கால்பந்து; ஆஸ்திரேலியா 18-0 கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்தியது

இந்தியாவில் நடந்து வரும் மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் ஆஸ்திரேலியா 18-0 என்ற புள்ளி கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்தி உள்ளது.
ஆசிய கோப்பை கால்பந்து; ஆஸ்திரேலியா 18-0 கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்தியது
Published on

புனே,

இந்தியாவில் மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், குரூப்-பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியா அணிகள் போட்டியிட்டன.

இதில், தொடக்கத்தில் தடுப்பு ஆட்டத்தில் திறமையுடன் இந்தோனேசியா விளையாடியது. எனினும், இதனை முறியடித்து ஆஸ்திரேலியா அதிரடியாக விளையாடியது.

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில், 18-0 என்ற புள்ளி கணக்கில் ஆஸ்திரேலியா, இந்தோனேசியாவை வீழ்த்தி உள்ளது. வருகிற திங்கட்கிழமை நடைபெற உள்ள போட்டி ஒன்றில் பிலிப்பைன்சுக்கு எதிராக ஆஸ்திரேலியா விளையாடுகிறது. இதேபோன்று தாய்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்தோனேசியா அடுத்து விளையாட உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com