ஆசிய கோப்பை கால்பந்து; கடைசி லீக் ஆட்டத்திலும் தோல்வியை சந்தித்த இந்தியா

இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று சிரியாவை எதிர்கொண்டது.
Image Courtesy: @afcasiancup
Image Courtesy: @afcasiancup
Published on

தோஹா,

ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் ஆசியன் கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. இதில் லீக் சுற்று முடிவில் தங்களது பிரிவுகளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெறும்.

இதில் இந்தியா 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, சிரியா மற்றும் உஸ்பெகிஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. தனது முதல் இரு ஆட்டங்களில் (ஆஸ்திரேலியா, உஸ்பெகிஸ்தான்) தோல்வி அடைந்த இந்திய அணி அடுத்த சுற்று வாய்ப்பை ஏற்கனவே இழந்துவிட்டது.

இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சிரியாவுடன் இன்று மோதியது. இந்த ஆட்டத்திலாவது இந்திய அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் இந்த ஆட்டத்தில் சிரியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது.

லீக் சுற்று ஆட்டம் முடிவில் இந்திய அணி தனது அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியை தழுவி புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து வெளியேறியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com