உலகக் கோப்பையில் ஆசிய அணிகள் ஆதிக்கம் - முதல் ஆட்டங்களில் தோல்வியின்றி அசத்தல்

முதல் லீக் ஆட்டங்களில் ஆசிய அணிகள் தோல்வியை சந்திக்காமல் இருப்பது உலகக் கோப்பை வரலாற்றில் கவனத்தை ஈர்த்துள்ளது.
உலகக் கோப்பையில் ஆசிய அணிகள் ஆதிக்கம் - முதல் ஆட்டங்களில் தோல்வியின்றி அசத்தல்
Published on

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஆசிய கால்பந்து கூட்டமைப்பை (AFC) சேர்ந்த அணிகள் அபாரமான தொடக்கத்தை பதிவு செய்துள்ளன. இதுவரை முதல் லீக் ஆட்டங்களில் களம் கண்ட கத்தார், தென்கொரியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஈரான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய அணிகள் தோல்வியை சந்திக்காமல் சிறப்பாக செயல்பட்டுள்ளன.

தென்கொரியாவுக்கு வெற்றி

’ஏ’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் தென்கொரியா அணி, செக் குடியரசை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியது.

கத்தார் ஆட்டம் டிரா

’பி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் கத்தார் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

ஆஸ்திரேலியா வெற்றி

’டி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி, துருக்கியை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து 3 புள்ளிகளை கைப்பற்றியது.

ஜப்பான் - நெதர்லாந்து ஆட்டம் டிரா

’எப்’ பிரிவில் ஜப்பான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிய போட்டி பரபரப்பாக அமைந்தது. இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்ததால் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

ஈரான் - நியூசிலாந்து மோதல் சமநிலை

’ஜி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஈரான் மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா இரண்டு கோல்கள் அடித்தன. இதனால் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

சவுதி அரேபியாவும் தோல்வியின்றி தொடக்கம்

’எச்’ பிரிவில் சவுதி அரேபியா மற்றும் உருகுவே அணிகள் மோதிய போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதன்மூலம் சவுதி அரேபியாவும் தோல்வியின்றி தொடங்கியுள்ளது.

உலகக் கோப்பையில் புதிய வரலாறு நோக்கி ஆசிய அணிகள்

முதல் லீக் ஆட்டங்களில் ஆசிய அணிகள் தோல்வியை சந்திக்காமல் இருப்பது உலகக் கோப்பை வரலாற்றில் குறிப்பிடத்தக்க சாதனையாக பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் போட்டிகளிலும் இந்த ஆதிக்கத்தை தொடர ஆசிய அணிகள் தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com