பண்டேஸ்லிகா கால்பந்து: பேயர்ன் முனிச் அணி “சாம்பியன்”

பேயர்ன் முனிச் அணி சாம்பியன் பட்டத்தை வெல்வது இது 35-வது முறையாகும்.
பண்டேஸ்லிகா கால்பந்து:  பேயர்ன் முனிச் அணி “சாம்பியன்”
Published on

முனிச்,

ஜெர்மனியில் மிகவும் பிரபலமானது பண்டேஸ் லிகா கால்பந்து போட்டி. இதன் 63-வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இதில், பங்கேற் றுள்ள 18 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதலிடம் பிடிக்கும் அணி 'சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும். முனிச்சில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் பேயர்ன் முனிச் அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஸ்டட் கார்ட்டை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் பேயர்ன் முனிச் அணி

இன்னும் 4 ஆட்டங்கள் எஞ்சி இருக்கும் நிலையில் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது. பேயர்ன் முனிச் அணி இதுவரை 30 ஆட்டங்களில் ஆடி 25 வெற்றி, 4 டிரா, ஒரு தோல்வியுடன் 79 புள்ளிகள் குவித்துள்ளது. 2-வது இடத்தில் இருக்கும் போருசியா டார்ட்மண்ட் அணி (19 வெற்றி, 7 டிரா, 4 தோல்வி) 64 புள்ளிகளே பெற்றுள்ளது.

ஒட்டுமொத்தத்தில் பேயர்ன் முனிச் சாம்பியன் பட்டத்தை வெல்வது இது 35-வது முறையாகும். இந்த ஆட்டத்தில் ஒரு கோல் அடித்த பேயர்ன் முனிச் நட்சத்திர வீரர் ஹாரிகேன் (இங்கிலாந்து) நடப்பு தொடரில் 32 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com