கால்பந்து உலகக் கோப்பையில் புதிய வரலாறு படைத்த கேப்வெர்டே

வெறும் 5 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாடு கேப்வெர்டே.
கால்பந்து உலகக் கோப்பையில் புதிய வரலாறு படைத்த கேப்வெர்டே
Published on

ஹூஸ்டன்,

பிபா உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற மிக சிறிய நாடு என்ற புதிய சாதனையை கேப்வெர்டே படைத்துள்ளது.

5 லட்சம் மக்கள் தொகை

வெறும் 5 லட்சம் மக்கள் தொகை கொண்ட கேப்வெர்டே, உலகின் சிறிய நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் முறையாக நாக் அவுட் சுற்றான 'ரவுண்ட் ஆப் 32'-க்கு முன்னேறியுள்ளது.

இதன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் நாக் அவுட் சுற்றை எட்டிய மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பெருமையை அந்த அணி பெற்றுள்ளது.

தோல்வியே இல்லை

'எச்' பிரிவில் இடம்பெற்றுள்ள கேப்வெர்டே அணி, மூன்று லீக் ஆட்டங்களிலும் தோல்வியடையாமல் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

ஸ்பெயினுக்கு எதிராக - 0-0 டிரா

உருகுவேக்கு எதிராக - 2-2 டிரா

சவுதி அரேபியாவுக்கு எதிராக - 0-0 டிரா.

X

Daily Thanthi
www.dailythanthi.com