சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பி.எஸ்.ஜி அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

பி.எஸ்.ஜி. அணி 2-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் கிளப்பை (இங்கிலாந்து) வீழ்த்தியது.
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பி.எஸ்.ஜி அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
Published on

லிவர்பூல்,

ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

இதன் காலிறுதி ஆட்டங்கள் 2 சுற்றுகள் கொண்டதாகும். காலிறுதியின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் பாரீஸ் செயின்ட் ஜெர் மைன் (பி.எஸ்.ஜி., பிரான்ஸ்) அணி 2-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் கிளப்பை (இங்கிலாந்து) வீழ்த்தியது. பி.எஸ்.ஜி. அணியில் உஸ்லான் டெம்பெலே 2 கோல்கள் அடித்தார். அந்த அணியை முதலாவது ஆட்டத்திலும் (2-0) தோற்கடித்து இருந்த பி.எஸ்.ஜி. அணி ஒட்டுமொத்தத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூலை வெளி யேற்றி அரையிறுதிக்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com