சாம்பியன் லீக் கால்பந்து: தோல்வியில் இருந்து தப்ப உதவிய ரொனால்டோ கோல்

நேற்று நடைபெற்ற கால்பந்து லீக் ஆட்டத்தில் அட்லாண்டா - மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது .
சாம்பியன் லீக் கால்பந்து: தோல்வியில் இருந்து தப்ப உதவிய ரொனால்டோ கோல்
Published on

சாம்பியன் லீக் கால்பந்து நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அட்லாண்டா - மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கிய 12 வது நிமிடத்தில் அட்லாண்டா அணியின் ஜோசிப் இலிசிக் ஒரு கோல் அடித்தார் .இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது .

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 45 வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் 1-1 என்று சமநிலையில் இருந்தது .

இதனையடுத்து ஆட்டத்தின் 56 வது நிமிடத்தில் அட்லாண்டா அணியின் துவான் ஜபாடா ஒரு கோல் அடித்தார் .இதனால் அட்லாண்டா அணி 2-1

என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது .

90 வது நிமிடம் வரை 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி வாய்ப்பில் இருந்த அடலாண்டா அணி, 90 நிமிடங்கள் நிறைவடைந்த பிறகு கூடுதலாக சில நிமிடங்கள் வழங்கப்பட்டது .இதை சரியாக பயன்படுத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோ கடைசி நேரத்தில் ஒரு கோல் அடித்ததால் மான்செஸ்டர் யுனைடெட் அணி தோல்வியிலிருந்து தப்பியது .

இதனால் 2-2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com