தென்மண்டல கால்பந்து போட்டியில் சென்னை பல்கலைக்கழக அணி வெற்றி

தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடந்து வருகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டி சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நடந்து வருகிறது. 2-வது நாளான நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக அணி (தமிழ்நாடு) 5-2 என்ற கோல் கணக்கில் ஆதிகவி நன்னயா (ஆந்திரா) அணியை தோற்கடித்தது.

சென்னை பல்கலைக்கழகம் 3-0 என்ற கோல் கணக்கில் அழகப்பாவை வீழ்த்தியது. இதே போல் வேல்ஸ் ஐ.எஸ்.டி. (தமிழ்நாடு) 3-0 என்ற கோல் கணக்கில் பெரியார் மணியம்மை அணியை சாய்த்தது. புதுச்சேரி, பாரதியார், ஜேப்பியார், டி.என்.பி.இ.எஸ்., கேரளா, கோழிக்கோடு ஆகிய அணிகளும் வெற்றி கண்டன. 

X

Daily Thanthi
www.dailythanthi.com