கிளப் உலகக்கோப்பை கால்பந்து: செல்சி அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

காலிறுதி சுற்று ஆட்டங்கள் இந்திய நேரப்படி இன்று தொடங்கின.
image courtesy:twitter/@ChelseaFC
image courtesy:twitter/@ChelseaFC
Published on

பென்சில்வேனியா,

கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் காலிறுதி சுற்று ஆட்டங்கள் இந்திய நேரப்படி இன்று தொடங்கின. இதில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் செல்சி - பால்மீராஸ் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் செல்சி 2-1 என்ற கோல் கணக்கில் பால்மீராஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. செல்சி தரப்பில் கோல் பால்மர் மற்றும் அகஸ்டின் ஜியாய் தலா ஒரு கோல் அடித்தனர். பால்மீராஸ் தரப்பில் எஸ்டிவோ மட்டுமே ஒரு கோல் அடித்தார்.

இதில் நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ப்ளுமினென்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் அல்-ஹிலால் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

அரையிறுதியில் ப்ளுமினென்ஸ் - செல்சி அணிகள் மோத உள்ளன. 

X

Daily Thanthi
www.dailythanthi.com