கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் இன்று தொடக்கம்

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
Image Courtesy: @FIFACWC
Image Courtesy: @FIFACWC
Published on

நியூயார்க்,

கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் இன்று முதல் அடுத்த மாதம் (ஜூலை) 13-ந்தேதி வரை நடக்கிறது. ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்த இந்த போட்டி இனி 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப அணிகளின் எண்ணிக்கை 7-ல் இருந்து 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பங்கேற்கும் 32 அணிகளில் 5 முறை சாம்பியனான ரியல் மாட்ரிட் மற்றும் அத்லெட்டிகோ மாட்ரிட் (ஸ்பெயின்), பேயர்ன் முனிச் (ஜெர்மனி), பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்), மான்செஸ்டர் சிட்டி, செல்சியா (இங்கிலாந்து), இன்டர் மியாமி (அமெரிக்கா), யுவென்டஸ், இன்டர் மிலன் (இத்தாலி), பால்மிராஸ், பிளமென்கோ (பிரேசில்), ரிவர் பிளேட், போகா ஜூனியர்ஸ் (அர்ஜென்டினா), அல்-ஹிலால் (சவுதி அரேபியா) உள்ளிட்ட அணிகள் முக்கியமானவை. இவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'நாக்-அவுட்' சுற்றுக்கு முன்னேறும். இறுதிப்போட்டியில் வாகை சூடும் அணிக்கு ரூ.350 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

அத்துடன் போட்டி கட்டணம், லீக், நாக்-அவுட் வெற்றிகளுக்கு கிடைக்கும் பரிசு எல்லாவற்றையும் சேர்த்தால் ஒரு அணி அதிகபட்சமாக ரூ.1,132 கோடி வரை வெல்ல முடியும். மியாமியில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் லயோனல் மெஸ்சியை உள்ளடக்கிய அமெரிக்காவின் இன்டர் மியாமி கிளப் அணி, எகிப்தின் அல்- அலியை எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com