

போர்ச்சுக்கல்,
உலக கால்பந்து அரங்கில் தனக்கென தனி முத்திரை பதித்த வீரர்களுள் ஒருவர் கிறிஸ்டியானா ரொனால்டோ. போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். தற்போது இவருடைய மனைவி ஜெர்ஜினா ரோட்ரிக்ஸ் மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார்.
இது குறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறும்போது, "நாங்கள் இரட்டைக் குழந்தைகளை எதிர்பார்க்கிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் இதயங்கள் அன்பால் நிறைந்துள்ளன - உங்களைச் சந்திக்க நாங்கள் காத்திருக்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.
ரொனால்டோவுக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளனர். இதில் 3 குழந்தைகள் வாடகை தாய் மூலம் பிறந்தது குறிப்பிடத்தக்கது.