புதிதாக யூடியூப் சேனல் தொடங்கிய ரொனால்டோ: 1 மணிநேரத்தில் 1 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள்

புதிதாக யூடியூப் சேனல் ஒன்றை கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடங்கி உள்ளார்.
புதிதாக யூடியூப் சேனல் தொடங்கிய ரொனால்டோ: 1 மணிநேரத்தில் 1 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள்
Published on

உலகளவில் புகழ்பெற்ற கால்பந்து சூப்பர்ஸ்டாரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, யூடியூப் துறையில் தனது "யு.ஆர்கிறிஸ்டியானோ" என்ற சேனலை அறிமுகப்படுத்தி உள்ளார்.

39 வயதான ரொனால்டோ, எல்லா காலத்திலும் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக பாராட்டப்பட்டவர். புதிதாக யூடியூப் சேனலை அறிமுகம் செய்ததன் மூலம் அவரது புகழ் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

புதிய யூடியூப் சேனல் தொடர்பான அறிவிப்பு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டார். அந்த வீடியோவில், "நான் யுஆர் கிறிஸ்டியானோ என்ற பெயரில் யூட்யூப் சேனல் ஆரம்பித்துள்ளேன். அதை அனைவரும் சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்" என்று பேசியுள்ளார்.

இந்நிலையில் ரொனால்டோவின் யூடியூப் சேனலை 1 மணிநேரத்திற்குள் 1 மில்லியன் பேர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர். இதுவரை இந்த சேனலில் 18 வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com