இங்கிலாந்து கால்பந்து அணி வீரர்களின் பொருட்கள் திருட்டு

இங்கிலாந்து அணி, தற்போது அமெரிக்காவில் பயிற்சி எடுத்து வருகிறது.
இங்கிலாந்து கால்பந்து அணி வீரர்களின் பொருட்கள் திருட்டு
Published on

கான்சாஸ் சிட்டி,

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி 'எல்' பிரிவில் இடம் பிடித்துள்ளது. இங்கிலாந்து அணி தனது முதலாவது ஆட்டத்தில் குரோஷியாவை வருகிற 18-ந் தேதி சந்திக்கிறது. இந்த போட்டிக்கு தயாராக இங்கிலாந்து அணி, தற்போது அமெரிக்காவில் பயிற்சி எடுத்து வருகிறது.

இங்கிலாந்து அணி புளோரிடாவில் இருந்து கான்சாஸ் சிட்டிக்கு செல்வதற்கு முன்பாக அந்த அணி வீரர்களின் ஷூ மற்றும் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் திருட்டு போனது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் கான்சாஸ் சிட்டி போலீசார் சந்தேகத்துக்குரிய நபர்கள் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com