ஐரோப்பா லீக் கால்பந்து : மான்செஸ்டர் அணி வெற்றி

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் - ஷெரிப் அணிகள் மோதின.
Image Courtesy : Manchester United Twitter 
Image Courtesy : Manchester United Twitter 
Published on

ஐரோப்பா சாம்பியன் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது.இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் - ஷெரிப் அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் மான்செஸ்டர் அணி ஆதிக்கம் செலுத்தியது.ஆட்டத்தின் 44வது  நிமிடத்தில் அந்த அணி வீரர் டியோகோ டாலோட் கோல் அடித்தார்.

பின்னர் நடந்த 2வது பாதி ஆட்டத்தில் மான்செஸ்டர் அணியின் மார்கஸ் ரஷிபோர்ட 65வது நிமிடத்தில் . கிறிஸ்டியானோ ரொனால்டோ 81வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்க ஷெரிப் அணி போராடியும் கோல் அடிக்க முடியவில்லை.இதனால் 3-0 என்ற கணக்கில் மான்செஸ்டர் அணி வெற்றி பெற்றது.

X

Daily Thanthi
www.dailythanthi.com