ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து - பி.எஸ்.ஜி., அட்லெட்டிகோ அணிகள் வெற்றி

பார்சிலோனா வீரர் குபார்ஸ் நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து - பி.எஸ்.ஜி., அட்லெட்டிகோ அணிகள் வெற்றி
Published on

பாரீஸ்,

ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்தில் தற்போது கால்இறுதி சுற்று நடந்து வருகிறது. ஒவ்வொரு கால்இறுதியும் 2 ஆட்டங் கள் கொண்டதாகும். இதில் நேற்று முன்தினம் இரவு பாரீசில் நடந்த கால் இறுதியின் முதலாவது ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி., பிரான்ஸ்) 2-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூலை (இங்கிலாந்து) தோற்கடித்தது.

பி.எஸ்.ஜி. அணியில் டிசைட் டுயே (11-வது நிமிடம்), கவராத்ஸ்ஹெலியா (65-வது நிமிடம்) கோலடித்தனர். பார்சிலோவி னாவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் அட்லெட்டிகோ மாட்ரிட் (ஸ்பெயின்) 2-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவை (ஸ்பெயின்) வீழ்த்தியது.

ஜூலியன் அல்வாரெஸ் (45-வது நிமிடம்), அலெக்சாண்டர் சார்லோத் (70-வது நிமிடம்) கோல் போட்டனர். 44-வது நிமிடத்தில் பார்சிலோனா வீரர் குபார்ஸ் முரட்டு ஆட்டம் காரணமாக நடுவரால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டியதானது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com